வங்கதேச ரம்ஜான் தொழுகைக் கூட்டத்தில் தாக்குதல்: குடியரசுத் தலைவர் இரங்கல்

வங்கதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
வங்கதேச ரம்ஜான் தொழுகைக் கூட்டத்தில் தாக்குதல்: குடியரசுத் தலைவர் இரங்கல்
Updated on
1 min read

புது தில்லி: வங்கதேசத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

வங்கதேசத்தில் ரம்ஜான் தொழுகைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட முட்டாள்தனமான இந்த தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியான சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு வார காலத்தில் வங்கதேசத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் இது. தாக்குதலில் உயிரிழந்த ஆன்மாக்கள் இறைவனடி சேர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com