கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி அகமதாபாத்தில் கைது

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இம்ரான் படுக் இன்று அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி அகமதாபாத்தில் கைது
Updated on
1 min read

மலிகான்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இம்ரான் படுக் இன்று அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2002-ம் ஆண்டு மெல்கானில் ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான இம்ரான் படுக்கை அகமதாபாத் குற்றவியல் போலீசார் கைது செய்தனர்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையைச் சேர்ந்த பரூக் பானா என்பவரை மும்பையில் கடந்த மே 18-ல் போலீசார் கைது செய்தனர்.

கதிர் அப்துல் கானி மற்றும் ஹுசைன் சுலைமான் மோகன் ஆகிய மேலும் இரண்டு குற்றவாளிகளை கடந்த ஆண்டு கைது செய்தனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இம்ரான் படுக் இன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com