இந்திய ரயில்களில் இந்த வருடம் புதிதாக மேலும் 30,000 பயோ டாய்லெட்டுகள் சேர்க்கபப்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டில்லியில் இன்று நடந்த விழா ஒன்றில் ரயில்வே துறை, இந்திய தொழில் துறை கூட்டமைப்புட ன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்வேக்கு சொந்தமான தயாரிப்பு மையங்களில் ஆற்றல் சேமிப்பு மற்றும் பசுமை தர மதிப்பீடு மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த ஒப்பந்தம் மூலம் பசுமை தர மேம்பாடு தொடர்பான ரயில்வேயின் நடவடிக்கைகளை சர்வதேச அளவீடுகளுடன் ஒப்பிட்டுகே கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்திய தொழில் துறை கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
க்ரீன் கோ என்ற அமைப்பை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் உண்டாகும் சுற்றுசூழல் பாதிப்புகளைக் களைவதற்கான பசுமை தர மேம்பாடு நடவடிக்கைகள் குறித்து க்ரீன் கோ ஆலோசனைக ள் கொடுக்கும்.
முதல் கட்டமாக பெரம்பூர் மற்றும் வாரணசியில் உள்ள ரயில்வே பெட்டித் தொழிற்சாலைக ள் மற்றும் பெரம்பூரில் உள்ள பணிமனை ஒன்று ஆகியவை முதல்கட்ட பரிசீலனைக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
க்ரீன் கோ அமைப்பு மிகப்பெரிய அளவிலான 10 செயல் வழி காரணிகள் மூலம் இந்த மதிப்பீ ட்டு பணிகளை நடத்தும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


