ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கனமழை எதிரொலி: தில்லி - சென்னை விமான சேவை பாதிப்பு

தலைநகர் புது தில்லியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னை - தில்லி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜூலை 2016, 7:04 am

சென்னை: தலைநகர் புது தில்லியில் பெய்து வரும் கன மழை காரணமாக, சென்னை - தில்லி இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட வேண்டிய பல்வேறு விமான சேவை நிறுவனங்களின் விமானங்கள் புறப்பாடு நேரம் மாற்றப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், சனிக்கிழமையும் தில்லியில் தொடர்ந்து கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.