தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஹைதராபாத்தில் சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் குதித்து தற்கொலை

ஹைதராபாத், ரங்கா ரெட்டி அருகே  குடும்பத் தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது  குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :30 ஜூலை 2016, 7:32 am

ஹைதராபாத்: ஹைதராபாத், ரங்கா ரெட்டி அருகே  குடும்பத் தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது  குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்யநாராயணன் (58) இவர் அதிலாபாத்தில் உள்ள நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இவரது மனைவி மீரா (51), மகள்கள் ஸ்வாதி (33), நீலிமா (28) மற்றும் மகன் சிவராமகிருஷ்ணா (22) ஆகிய 4 பேரும் இன்று காலை ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.