

போராட்டத்தின் போது போலீஸ் குதிரையின் காலை உடைத்த உத்தரகாண்ட் பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநில பேரவையை நோக்கி நேற்று பேரணி நடத்தப்பட்டது. பேரணியை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், முசௌரி சட்டப் பேரவை உறுப்பினர் கணேஷ் ஜோஷி உள்ளிட்ட சிலர், காவல் துறை குதிரையின் காலை அடித்து உடைத்தனர்.
இதில் நிலைகுலைந்த அந்த குதிரை கீழே விழுந்தது. அதால் எழுந்து நிற்கவே முடியவில்லை. குதிரையை பரிசோதித்த மருத்துவர்கள் காலை அகற்ற வேண்டும் என கூறிவிட்டனர்.
இந்நிலையில் குதிரையை தாக்கிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, பாஜக எம்.எல்.ஏ.வால் குதிரை தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கட்சி மேலிடம் அறிந்துள்ளது. அந்த எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.