தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் கூறினார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா, விழாக் காலங்களில் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, தேவைப்பட்டால் தேர்தல் காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல வெளி மாநிலங்களில் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். எனினும், மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக அவர்கள் சொந்த ஊருக்கே வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தேர்தல் காலங்களில் தேவைப்பட்டால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு அரசு பரிசீலனை செய்யும் என்றார் அமைச்சர்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அந்தோதியா ரயில்களில் சாதாரணக் கட்டணமே வசூலிக்கப்படும். ஆனால், தேஜஸ் மற்றும் ஹம்சஃபர் ரயில்களில் 'தேவைக்கேற்ப கட்டணம்' (தேவை அதிகமாக இருந்தால் கட்டணமும் அதிகமாக இருக்கும்) வசூலிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


