பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பகத் சிங் நினைவு தினம்: பிரதமர் மோடி வீர வணக்கம்

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.

News image
Updated On :23 மார்ச் 2016, 6:51 am

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.

பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் உயிர் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, மாவீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினமான இன்று பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் அவர்களின் இணையில்லா வீரம், நாட்டுப்பற்று மற்றும் இந்திய சுதந்திரத்துக்காக செய்த உயிர் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது வருங்கால தலைமுறையினர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக, இம்மூன்று இளைஞர்களும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்திருப்பது அவர்களது நாட்டுப்பற்றை பறைசாற்றுகிறது என்றும் மோடி கூறியுள்ளார்.

புகழ்பெற்ற தலைவர் லாலா லஜபதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறை அதிகாரியை சுட்டுக் கொன்ற காரணத்துக்காக பிரட்டிஷ் அரசால், மூன்று இளைஞர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.