கேந்தரபாரா : ஒடிசாவில், கேந்திரபாரா மாவட்டத்தில் ஒடிசா துணை காவல் படையைச் சேர்ந்த காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டமால் மாவட்டத்தில் உள்ள கெண்டுசயி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர கண்ஹாரா (வயது 26). இவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். துப்பாக்கியின் குண்டு தலையின் நெற்றியை துளைத்ததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குடும்ப தகராறு மற்றும் பணிச்சுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மறான மரணம் என்பதால் வழக்குப் பதிவு செய்து, இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உயர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.