பதான்கோட் : பதான்கோட் விமான படைத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வந்துள்ள பாகிஸ்தான் குழுவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பதான்கோட் விமானப் படைத் தளத்தில் அக்குழுவினர் நேரில் ஆய்வு நடத்தவிருக்கின்றனர்.
இதற்காக, விசாரணைக் குழுவினர் பதான்கோட் விமானப்படைத் தளத்துக்கு குண்டுகள் துளைக்காத வாகனங்களில் வந்துள்ளனர்.
பாகிஸ்தான் விசாரணைக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தியும், பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பியும் விமானப் படைத் தள வளாகத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து விமானப் படைத் தளத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

