மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்பு

துணை அட்மிரலாக இருந்த சுனில் லன்பா புதிய கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

News image
Updated On :31 மே 2016, 7:22 am

புது தில்லி: துணை அட்மிரலாக இருந்த சுனில் லன்பா புதிய கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக கடற்படை தளபதியாக இருந்த ஆர்.கே தோவன் ஓய் பெற்றதை தொடர்ந்து  புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய கடற்படையில் உள்ள ஒவ்வொரு பணியையும் பொறுப்புடன் சுனில் செய்து முடிப்பார் என்று நம்புகிறேன் என்று தோவன் கூறியுள்ளார்.

1957-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி பிறந்த சுனில் லன்பா, 1978-ல் இந்திய கடற்படையில் சேர்ந்தார். கடந்த 38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் கமெண்டோ, செயல்பாட்டு மற்றும் ஊழியர்கள் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர், இறுதியாக கடற்படை துணை அட்மிரலாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது சுனில் லன்பா கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார். இவர் பரம் விஷிஸ்ட் சேவா மற்றும் அட்டி விஷிஸ்ட் சேவா விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.