டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லி ஷாஹ்தரா பகுதியில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி

வடக்கு தில்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள வீட்டில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :2 நவம்பர் 2016, 5:55 am


புது தில்லி: வடக்கு தில்லியின் ஷாஹ்தரா பகுதியில் உள்ள வீட்டில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.

ஒரு வீட்டின் கார் பார்க்கிங் பகுதியில் தீப்பற்றியதாக இன்று அதிகாலை 5.06 மணியளவில் போன் வந்தது. ஆனால், அந்த தீ மளமவென 4 மாடிகளைக் கொண்ட வீடு முழுவதும் பரவிவிட்டதாக தில்லி தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 3 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.