தில்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதி!

தில்லியில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்துக்கு கெஜ்ரிவால் ரூ.1 கோடி நிதி!

தில்லியில் நேற்று 'ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த கோரி நடந்த போராட்டத்தில், தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி...

பிவானி (ஹரியானா): தில்லியில் நேற்று 'ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த கோரி நடந்த போராட்டத்தில், தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதாக தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தில்லியில் நேற்று முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரேவால் (70) விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.திட்ட நடைமுறையில் உண்டான தாமதத்தின் காரணமாக,  மத்திய அரசு மீது ஏற்பட்ட விரக்தியால், அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  கிஷண் கிரேவால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் .

இன்று ஹரியானா மாநிலத்தின் பிவானி பகுதியில் நடந்த கிரேவாலின் தகன நிகழ்விற்கு பிறகு, அங்கு கூடியிருந்த செய்தியாளரக்ள் முன்னிலையில் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார்.அப்போது கிரேவாலின் மகன் ஜஸ்வந்த்தும் உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com