ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மழைக்கு லீவ் விட்ட காலம் போய் புகைக்கு லீவ் விடும் காலம் இது

கடுமையான புகை மூட்டம் காரணமாக தில்லியில் சுமார் 1,700 துவக்கப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.

News image
Updated On :5 நவம்பர் 2016, 7:18 am


புது தில்லி: கடுமையான புகை மூட்டம் காரணமாக தில்லியில் சுமார் 1,700 துவக்கப் பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.

தில்லியில் உள்ள இந்த 1,700 துவக்கப் பள்ளிகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தெற்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன், வடக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன், கிழக்கு தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட அனைத்துத் துவக்கப் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புக் கருதியே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் கடுமையான புகை மூட்டம் இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டதாக தில்லியின் உயர் அதிகாரி ஆர்யா தெரவித்துள்ளார்.

தீபாவளி முதலே தில்லியில் கடுமையான காற்று மாசு காணப்படுகிறது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு மாசடைந்து, வெளியே வரும் மக்களும் முகக் கவசம் அணிந்தே வெளியே வருகின்றனர். கடுமையான மாசு காரணமாக வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழைக்கு விடுமுறை விட்ட காலம் போய், தற்போது புகைக்கும் விடுமுறை விடும் காலம் வந்து விட்டதே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.