கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பாரம்பரிய நினைவிடத்தின் அருகே கண்மாய் கட்ட முயன்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ கைது!

தில்லி கிராரியில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆற்றங்கரை ஓரத்தில் கண்மாய் ஒன்றை கட்ட முயன்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்த் இன்று காவல்துறையினரால் கைது. ..

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:52 am

DIN

புதுதில்லி: தில்லி கிராரியில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆற்றங்கரை ஓரத்தில் கண்மாய் ஒன்றை கட்ட முயன்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்த் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சூரிய பகவானை வாழ்த்தி கொண்டடப்படும் 'சாட்'  பூஜைக்கு தில்லி வாழ் மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த  நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்த் என்பவர், தனது தொகுதியான கிராரியில் உள்ள அதிவிரைவு நெடுஞ்சாலையில் ஆற்றங்கரை ஓரமாக கண்மாய் ஒன்றை கட்ட முயன்றார்.

வரலாற்று சிறப்புக்குரிய பாரம்பரிய நினைவிடத்தின் அருகே கன்மாய் கட்டும் அவரது இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன காரணமாக போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி சனிக்கிழமை இரவன்று அப்பகுதிக்குள் நுழைய முயன்ற எம்.எல்.ஏ. ரிட்டுராஜ் கோவிந்தை தில்லி போலீசார் கைது செய்தனர்.  பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டமைக்காக ரிட்டுராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி புறநகர் போலீஸ் துணை கமிஷனர் எம்.என்.திவாரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.