கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

பிற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்தது மத்திய அரசு!

அரசின் உத்தரவின் படி புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்களிடம் புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு, நாளை  முதல் பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து...

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:54 am

DIN

புதுதில்லி: அரசின் உத்தரவின் படி புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்களிடம் புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு, நாளை  முதல் பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிய  ரூபாய் நோட்டுக்களை பெறவும் வழி வகை செய்யும் வகையில் வங்கிகளின் ஏ.டி.எம்-கள் இரண்டுநாட்கள் செயல்படவில்லை.

இரண்டு நாட்கள் மூடப்பட்டிருந்த அனைத்து ஏடிஎம்-களும் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன. அந்த ஏடிஎம்-களில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை மக்கள் எடுத்துக் கொள்ள முடியும்.  எனவே நாளை முதல் சில தினங்களுக்கு ஏடிஎம்-களில் குவியும் கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக மற்ற வங்கி ஏடிஎம்-களை 5 முறை வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கு தனிகட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.