முன்னாள் முதல்வரின் மருமகன் கைது!

காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வரின் மருமகன் கைது!
Updated on
1 min read

புதுதில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்த்த தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மருமகன் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா. இவரும் இவரது கணவர் இம்ரானும் கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் பிரிந்து விட்டனர், அதன் பின்னர் இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இம்ரான் மீது தில்லி போலீசில் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் லத்திகா புகார் கொடுத்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில் பெங்களூருவில் தங்கி இருந்த இம்ரானை தில்லி போலீசார் இன்று கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com