மக்களுக்கு நன்மை அளிக்கும் யோசனைகளை தாருங்கள்: எதிர்க்கட்சிக்கு மோடி வேண்டுகோள்

நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மக்களுக்கு நன்மை அளிக்கும் யோசனைகளை தாருங்கள்: எதிர்க்கட்சிக்கு மோடி வேண்டுகோள்
Updated on
1 min read


புது தில்லி: நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட்டு, நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் பல நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதற்கு எதிர்க்கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நல்ல விவாதங்களை எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு நல்லதை கொண்டு சேர்க்க அனைவரை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பண ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் சாமானியர்கள் சந்தித்த பிச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அனைவரும் பங்கேற்று புதிய யோசனைகளையும், திட்டங்களையும் தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com