வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

பணம் மாற்றுவோருக்கு மை வைக்கும் பணி தொடங்கியது: எந்த விரலில் மை?

வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணி தில்லியில் உள்ள வங்கியில் தொடங்கியது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:56 am

DIN


புது தில்லி: வங்கியில் பணம் மாற்ற வருவோருக்கு மை வைக்கும் பணி தில்லியில் உள்ள வங்கியில் தொடங்கியது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, கையில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கும் பொது மக்களின் விரலில் மை வைக்கப்படும் என்ற புதிய முறையை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதையடுத்து, இன்று முதல் வங்கிகளில் பணம் எடுக்க வருவோரின் விரல்களில் மை வைக்கும் பணி தொடங்கியது. முதல் முறையாக தில்லி வங்கியில் இந்த திட்டம் தொடங்கியுள்ளது.

தேர்தல் நடக்காத பகுதிகளில் பணத்தை மாற்றும் பொதுமக்களின் இடது கையின் ஆட்காட்டி விரலிலும், தேர்தல் நடக்கும் இடத்தில் வலது கையின் ஆட்காட்டி விரலிலும் மை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.