நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்காத பணப்பஞ்சம்!
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் தாக்கமானது, நமது ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.


புது தில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் தாக்கமானது, நமது ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.
நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் நினைவுப்பொருட்கள் விற்கும் கடை, உணவகங்கள் மற்றும் தேநீர் விற்பனை மையங்கள் என அனைத்துமே இந்த பிரச்சினையால் தவித்து வருகின்றன. அத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் ஒரு சில ஏ.டி .எம்களும் பணம் இன்றி காலியாக இருக்கும் நிலைதான் உள்ளது.
இதன் காரணமாக சராசரியாக ஒருநாளுக்கு ரூ 4000 முதல் 5000 வரை விற்பனை நடைபெற்று வந்த நினைவுப்பொருள் விற்பனை மையத்தில் தற்போது அதிகபட்சமாக ரூ 1000 மட்டுமே விற்பனை ஆகிறது.
இந்த பிரச்சினைக்கு மற்றுமொரு முக்கிய காரணம் இந்த வளாகத்தில் எங்குமே 'ஈ பேமெண்ட்' வசதி கிடையாது என்பது தான். நாடு முழுவதும் 'ஈ பேமெண்ட்' எனபப்டும் எலெக்ட்ரானிக் பணபரிமாற்ற வசதிகளை பயன்படுத்த வலியுறுத்தும் பிரதமரின் அறிவிப்பு, நாடாளுமன்றத்தை இன்னும் எட்டவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...