தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மோடி ஒரு சர்வாதிகாரி: மம்தா கடும் தாக்கு!

பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:49 pm

லக்னோ : பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

செல்லாத ருபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் மத்திய அரசைக்  கண்டித்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று எதிர்க்கட்சிகளின் பேரணி ஒன்று நடைபெற்றது.  இதில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்த பேரணியில் சமாஜ்வாதிக்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருப்பது, நாடு முழுவதும் பணத்தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது.   இதன் மூலம் நெருக்கடி நிலை போன்றதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்ற வேண்டுகோளை  நிராகரித்திருப்பதன் மூலம் மோடி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். தற்பொழுது திரிணாமுல் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.