ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

டெங்கு விவகாரத்தில் தில்லி சுகாதாரத் துறைக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் காட்டம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 அக்டோபர் 2016, 7:36 am


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத தில்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தில்லியில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் பாதித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் நோயை கட்டுப்படுத்த தில்லி அரசும், சுகாதாரத் துறையும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தில்லி அரசு தவறிவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத சுகாதாரத் துறைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 24 மணி நேரம் அவகாசம் கேட்டார் தில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சத்யேந்திர ஜெயின்.

மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கும் போது, மாநில அரசுக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுக்க முடியாது என்று காட்டமாகக் கூறியுள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.