பாகிஸ்தான் பறக்க விடும் பலூன், புறா: ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்'

இந்திய எல்லைக்குள் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலூனையும், புறாவையும் பாகிஸ்தான் பறக்க விடுவது ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்' என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகிறார்.
பாகிஸ்தான் பறக்க விடும் பலூன், புறா: ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்'
Updated on
1 min read


ஜம்மு: இந்திய எல்லைக்குள் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலூனையும், புறாவையும் பாகிஸ்தான் பறக்க விடுவது ஒரு வகையான 'சைக்காலஜி ஆபரேஷன்' என எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகிறார்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

இதனால், இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும், பிரதமர் மோடியை எச்சரிக்கும் வகையிலும் பாகிஸ்தானில் இருந்து பலூன்களும், புறாக்களும் பறக்க விடப்படுகின்றன.

இவற்றை எல்லையோர மக்கள் பார்த்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு வகையான சைக்காலஜி ஆபரேஷன். இவற்றைப் பார்க்கும் எல்லையோரம் உள்ள ஜம்மு மற்றும் பஞ்சாப் கிராமப் பகுதியைச் சேர்ந்த மக்கள், மிகுந்த கலக்கம் அடைவார்கள்.

இதனால், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் இடையே ஒரு வித அதிருப்தி நிலவும், இது அப்பகுதியில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

கடந்த வாரம், பாகிஸ்தானில் இருந்து வந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த பேப்பரில், "மோடிஜி, நாங்கள் 1971 (இந்தியா - பாகிஸ்தான் போர்) நடந்த போது இருந்தது போலவே இருப்போம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இப்போது, நாங்கள் அனைவரும், எங்களது குழந்தைகளும் கூட இந்தியாவுக்கு எதிரான போருக்கு தயாராக உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com