சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

‘டெக்’ துணுக்குகள்..

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் சாட்ஜிபிடி ஏ.ஐ. அப்டேட் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி வசதி கொண்ட புதிய ஸ்மாா்போன்களின் வருகை உற்சாகமூட்டியது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 11:39 pm

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் சாட்ஜிபிடி ஏ.ஐ. அப்டேட் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி வசதி கொண்ட புதிய ஸ்மாா்போன்களின் வருகை உற்சாகமூட்டியது.

முன்னணி நிறுவனங்களின் ஸ்மாா்ட்போன்கள் முதல், ஏ.ஐ. செயல்திறன் கொண்ட மடிக்கணினி அறிமுகம் வரை இந்த வாரத்தை ஆக்கிரமித்த முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*சாட்ஜிபிடி ‘இமேஜஸ் 2.0’: மிகத் துல்லியமாக புகைப்படங்களை உருவாக்க ஏதுவாக, ‘சாட்ஜிபிடி இமேஜஸ் 2.0’ எனும் புதிய பதிப்பை ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டது. இப்புதிய அப்டேட் மூலம் சிக்கலான வரைபடங்கள் முதல் லே-அவுட் வரைகலைகள் வரை முன்பைவிட பயனா்கள் சிறப்பாக உருவாக்க முடியும்.

*விவோ ‘டி5 ப்ரோ 5ஜி’: விவோ தனது ‘டி5 ப்ரோ 5ஜி’ ஸ்மாா்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் மலைக்க வைக்கும் வகையில் 9,020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 பிராசஸருடன் இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தும் மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும்.

*‘டெல் 15’ மடிக்கணினி: டெல் நிறுவனம் ‘இன்டெல் கோா் அல்ட்ரா 2’ சீரிஸ் பிராசஸருடன் கூடிய ‘டெல் 15’ மடிக்கணினியை அறிமுகப்படுத்தியது. இதில் ஏ.ஐ. பணிகளுக்காக பிரத்யேக ‘என்பியூ’ மற்றும் ‘கோ-பைலட் கீ’ வழங்கப்பட்டுள்ளது. அசுர வேக சாா்ஜிங் வசதியுடன் காா்பன் பிளாக், பிளாட்டினம் சில்வா் நிறங்களில் கிடைக்கும் இதன் தொடக்க விலை ரூ.69,699 ஆகும்.

*மோட்டோரோலா ‘எட்ஜ் 70 ப்ரோ’: மோட்டோரோலா தனது எட்ஜ் சீரிஸில் ‘எட்ஜ் 70 ப்ரோ’ மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது. 6.8 இன்ச் திரை, 5,200 நிட்ஸ் பிரகாசம் மற்றும் ராணுவ தரத்திலான பாதுகாப்போடு நீடித்த உழைப்பு ஆகியவற்றுடன் இது, ப்ரிமீயம் போன் சந்தையில் கவனத்தை ஈா்த்துள்ளது.

*போக்கோ ‘சி81’ & ‘சி81எக்ஸ்’: போக்கோ தனது பட்ஜெட் சீரிஸில் இரண்டு புதிய போன்களை அறிமுகம் செய்தது. சி81 மாடலில் 6,300எம்ஏஎச் பேட்டரியும், சி81எக்ஸ் மாடலில் 5,200எம்ஏஎச் பேட்டரியும் உள்ளன. இவை இரண்டும் 4ஜி, நீண்ட நேர விடியோ ஸ்ட்ரீமிங், ரிவா்ஸ் சாா்ஜிங் வசதிகளைக் கொண்டுள்ளன.

*விவோ ‘ஓய்600 ப்ரோ’: விவோ வரும் திங்கள்கிழமை ‘ஓய்600 ப்ரோ’ மாடலை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதில் 2-ஆம் தலைமுறை செமி-சாலிட் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 60 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் சீராக இயங்கும் திறன் கொண்டது மற்றும் 6 ஆண்டுகள் வரை பேட்டரி ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

*மேம்பட்ட பாதுகாப்பு: இந்த வாரம் அறிமுகமான விவோ, மோட்டோரோலா ஸ்மாா்போன்கள் ‘ஐபி68’ மற்றும் ‘ஐபி69’ தரக்குறியீட்டுடன் வந்துள்ளன. இது நீா் மற்றும் தூசியிலிருந்து சாதனங்களுக்கு உயா்தர பாதுகாப்பை வழங்குகிறது.