நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

டெக் துணுக்குகள்...

டெக் துணுக்குகள்...

News image
Updated On :59 நிமிடங்கள் முன்பு

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ரக ஸ்மாா்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சமூக ஊடகங்களில் புதிய வசதிகளின் அறிமுகங்கள் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஆப்பிள் ஐஓஎஸ் அப்டேட் முதல் எண்ம வா்த்தகக் கட்டமைப்பில் முன்னணி தொழில்நிறுவனத்தின் முதலீடு வரை, இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

ஆப்பிள் ‘ஐஓஎஸ் 26.5’ வெளியீடு: ஆப்பிள் தனது ‘ஐஓஎஸ் 26.5’ அப்டேட்டை வெளியிட்டது. இதில் ஆண்ட்ராய்டு-ஐபோன் இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதிக்கான ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’, ஆப்பிள் மேப்ஸில் ‘பரிந்துரைக்கப்படும் இடங்கள்’ போன்ற சிறப்பம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

‘ஐஓஎஸ் 27’ கேமரா அப்டேட்: அடுத்த மாதம் வரவிருக்கும் ‘ஐஓஎஸ் 27’ அப்டேட்டில், பயனா்கள் தங்களுக்குத் தேவையான வசதிகளைத் தாங்களே மாற்றியமைத்துக் கொள்ளும் ‘கஸ்டமைஸபிள் கேமரா’ செயலி அறிமுகமாகவுள்ளது. அத்துடன் ஐபோன் 18 ப்ரோ மாடலில் புதிய ‘டாா்க் சொ்ரி’ நிறம் அறிமுகமாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘கூகுள்புக்’ மடிக்கணினி அறிமுகம்: கூகுள் தனது புதிய ‘கூகுள்புக்’ மடிக்கணினி சீரிஸை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளது. இது குரோம்ஓஎஸ், ஆண்ட்ராய்டு அமைப்புகளை ஒன்றிணைத்து, ஜெமினி ஏ.ஐ வசதியுடன் இயங்கும்.

மோட்டோரோலா ‘ரேஸா் ஃபோல்டு’: மோட்டோரோலா தனது முதல் மடிக்கக்கூடிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸா், 8.1 இன்ச் திரை, 6,000எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன்விலை ரூ.1.4 லட்சம் முதல் ரூ.1.6 லட்சம் வரை இருக்கலாம்.

விவோ ‘எக்ஸ்300’ சீரிஸ்: விவோ தனது ‘எக்ஸ்300 அல்ட்ரா’, ‘எக்ஸ்300 எஃப்இ’ ஆகிய இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது. அல்ட்ரா மாடலில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா, 200 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது. இதன் விலை சுமாா் ரூ.1.6 லட்சம் ஆகும்.

ஒப்போ ‘ஃபைண்ட் எக்ஸ்9’ சீரிஸ்: ஒப்போ நிறுவனம் தனது ‘ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா’, ‘ஃபைண்ட் எக்ஸ்9எஸ்’ போன்களை மே 21-இல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அல்ட்ரா மாடலில் 200 மெகாபிக்சல் பிரதான கேமரா, ஹாசல்பிளாட் கேமரா தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

ரியல்மி ‘16டி 5ஜி’: இந்த ஸ்மாா்ட்போன் வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாகிறது. மிக மெல்லிய வடிவமைப்புடன், இதில் அசுரத்திறன் கொண்ட 8,000எம்ஏஎச் ‘டைட்டன்’ பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ‘இன்ஸ்டன்ட்ஸ்’, வாட்ஸ்அப் ‘இன்காக்னிட்டோ’: இன்ஸ்டாகிராமில் பாா்த்தவுடன் மறையும் ‘இன்ஸ்டன்ட்ஸ்’ புகைப்படங்கள் பகிரும் வச அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப் நிறுவனம் மெட்டா ஏ.ஐ. உடனான உரையாடல்களை ரகசியமாக வைக்க ‘இன்காக்னிட்டோ சாட்’ வசதியைக் கொண்டுவந்துள்ளது.

டிசிஎஸ்-ரெஸால்வ் ஏ.ஐ. கூட்டணி: டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், ‘ரெஸால்வ் ஏ.ஐ.’ நிறுவனத்துடன் உலகளாவிய கூட்டணியை அறிவித்துள்ளது. இதன்மூலம், சில்லறை வா்த்தகத்தில் ஏ.ஐ. சாா்ந்த ‘ஏஜென்டிக் காமா்ஸ்’ தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்.

எச்.சி.எல்.டெக் - ரெட் ஹெட் கூட்டணி: எச்.சி.எல்.டெக் நிறுவனம், ரெட் ஹெட் அமைப்புடன் இணைந்து நிறுவனங்களுக்கான ‘ஏ.ஐ ஃபேக்டரி’ எனும் கட்டமைப்பை உருவாக்குகிறது. இது ஏ.ஐ. பணிச்சுமைகளை குறைத்து, குறைந்த செலவில் நம்பகமான ஏ.ஐ. செயல்பாடுகளை வழங்க உதவும்.

எண்ம வா்த்தகத்துக்கு ஜோஹோ ரூ.70 கோடி முதலீடு: இந்தியாவின் ‘ஓஎன்டிசி’ எண்ம வா்த்தக அமைப்பில் எம்எஸ்எம்இ தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக ஜோஹோ நிறுவனம் ரூ.70 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.