வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த 90 வயது முதியவர்!

மரணம் அடைந்த தனது மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த 90 வயது முதியவர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:44 am

DIN

புதுதில்லி: மரணம் அடைந்த தனது மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த 90 வயது முதியவர் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

தென்கிழக்கு தில்லியில் உள்ளது கலகஜ் பகுதி. இங்கு ராம் என்ற 90 வயது முதியவர் தனது மனைவி கோபியுடன்  வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டுக்காரர்கள் நேற்று இரவு அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையிடம் புகார் செய்தனர். காவல் துறையினர் அவரது வீட்டிற்கு வந்து விசாரணை செய்த பொழுதுதான் அவரது மனைவி இறந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

காவல்துறையினர் சென்று பார்த்த பொழுது ராம் கட்டிலில் அலங்கோலமாக இருந்ததாகவும், தரையில்  பாதி சிதைந்த நிலையில் அவரது மனைவி கோபியின் உடல் கிடந்ததாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர். மேலும் ராம் தெளிவான மனநிலையில் இல்லை என்பதையும் அவர்கள் உறுதி செய்தனர்.

கோபியின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்தான் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வருமென்று தெரிவித்த காவல்துறையினர், சதிச்செயல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக தெரிவித்தனர்.

ராம் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

போலீசார் அவரிடம் விசாரித்த பொழுது தனது மனைவி கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், திங்களன்று கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் எழுந்து கொள்ளவே இல்லை என்றும் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.