கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தலித்துகள் மீதான தாக்குதல்களால் அவமானத்தில் தலை குனிகிறேன்: பிரதமர் மோடி 

தலித் சகோதரர்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:46 am

DIN

லூதியானா: தலித் சகோதரர்கள் மீது நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பட்டியல் மற்றும் பழங்குடியின வகுப்பியனார் பயன்பெறும் வகையில்  மத்திய சிறுகுறு நடுத்தர தொழில்துறையின் முயற்சியில் தேசிய எஸ்.சி.,எஸ்.டி. மையம்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.490 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

சமுதாயத்தில் நிலவும் முரண்பாடு காரணமாக, நமது தலித் சகோதரர்கள் மீது இன்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. இதைக் கேள்விப்படும்போது எனது தலை அவமானத்தால் தொங்குகிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் காத்திருக்கக்கூடாது.

நாம் நமது இலக்கை நோக்கிய கவனத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும். தலித் அல்லது பழங்குடியின மக்களின் விருப்பங்கள் நாட்டின் மற்ற இளைஞர்களை விஞ்சும் அளவுக்கு உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சிறந்த நிலையை எட்டுவார்கள்.

தலித் மற்றும் பழங்குடியினர் தொழிலதிபர்களாக உருவாக இந்த மையமானது உதவி செய்யும். அதன்மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு வேலை வழங்க முடியும். தலித் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து மாநில அரசுகள் 4 சதவீத உற்பத்திப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.