கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நமது படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடுங்கள்: மோடி வலியுறுத்தல்

எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:47 am

DIN

புதுதில்லி: எல்லையை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்காக, ‘எனது அரசாங்கம்’ என்ற சமூகவலைத்தளம் மூலமும், 'நரேந்திர மோடி' என்ற ‘ஆப்’ வழியாகவும்  #Sandesh2Soldiers என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,    "நான் நமது வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன். நமது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் தீரத்தை நீங்களும் நினைவுகூர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி வையுங்கள்.  நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் அவர்களை வாழ்த்தினால், நமது வீரர்களின் பலம் 125 கோடி மடங்கு அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.