இந்தியர்களின் உள்ளம் கொள்ளை கொண்ட ட்விட்டரின் 'கணேஷா எமோஜி'!
பிள்ளையார் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் அறிமுகப்படுத்திய கணேஷா எமோஜி' பயனீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


பிள்ளையார் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் அறிமுகப்படுத்திய கணேஷா எமோஜி' பயனீட்டாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைவிபரம் வருமாறு:
செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி வரை #கணேஷ்சதுர்த்தி என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 4,80,000 ஆகும்.
கணேஷா எமோஜி முதன் முறையாக செப்டம்பர் 4-ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்டது. #கணேஷ்சதுர்த்தி, #ஹேப்பி கணேஷ்சதுர்த்தி மற்றும் #கணேஷ் உத்சவ் உள்ளிட்ட ஹேஷ்டேகுகளை பயன்படுத்துவதன் மூலம் நம்மால் கணேஷா எமோஜியை பயன்படுத்த இயலும்.
அதிகபட்சமாக விநாயகர்சதுர்த்தி கொண்டாடப்பட்ட திங்களன்று காலை ஒரு நிமிடத்திற்கு 600 ட்வீட்டுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த சேவை செப்டம்பர் 16-ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...