ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

66வது பிறந்த நாளில் தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, சொந்த ஊரான காந்திநகர் சென்று, தாய் ஹிராபாவிடம் ஆசி பெற்றார்.

News image
Updated On :17 செப்டம்பர் 2016, 4:53 am


காந்திநகர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, சொந்த ஊரான காந்திநகர் சென்று, தாய் ஹிராபாவிடம் ஆசி பெற்றார்.

குஜராத் மாநிலம் ரெய்சான் பகுதியில் சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் 97 வயதான ஹிராபா தங்கியுள்ளார்.

இன்று காலை சகோதரர் வீட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தனது தாயிடம் ஆசி பெற்று, அவருடன் 25 நிமிடங்கள் பேசி மகிழ்ந்தார். பிறகு அங்கிருந்து கிளம்பி ராஜ்பவன் வந்தார்.

1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்த மோடிக்கு இன்று 66 வயது ஆகிறது. இதனை முன்னிட்டு ராஜ்பவனில் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுடன் தனது  பிறந்தநாளை பிரதமர் மோடி கொண்டாட உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.