ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியல் உள்ள ராணுவ படைப்பிரிவு தலைமையகத்தின் மீது நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்தினைத் தொடர்ந்து, இன்னும் சில பயங்கரவாதக் குழுக்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பதுங்கியிருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
சுமார் மூன்று குழுக்கள் ஒன்றாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்க வேண்டும், ஒவ்வொரு குழுவிலும் மூன்று அல்லது நான்கு பேர் இருப்பார்கள். இதில் ஒரு குழுதான் உரி பகுதியில் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மற்றொரு குழு சில நாட்களுக்கு முன்பு பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
எனவே, மூன்றாவது குழு ஏதேனும் ஒரு பகுதியில் பதுங்கியிருக்க வேண்டும். இது ஸ்ரீநகரையோ அல்லது மாநிலத்தின் வேறு பகுதியிலோ தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய எல்லைக்கு அப்பால் சுமார் 200 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் எந்த நேரத்திலும் எலலைக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடலாம் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராஜேந்திர குமார் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


