ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஹைதராபாத்தில் கன மழை: ராணுவத்தின் உதவி கோரப்பட்டது

ஆந்திர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தெலங்கானா அரசு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2016, 6:53 am


ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தெலங்கானா அரசு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளது.

ஹைதராபாத்தின் கச்சிபௌலி, நிஸாம்பெட், அல்வால், ஹகிம்பெட் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தின் உதவியை தெலங்கானா அரசு கோரியுள்ளது.

அவர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட முன்வந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளின் வரைபடங்கள் மற்றும் தகவல்கள் அவர்களிடம் தரப்படும் என்று கிரேட்டர் ஹைதராபாத் நகராட்சியின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திராவில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஹைதராபாத்தில் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.