ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஊழல் செய்த கோரம்: தில்லியில் முன்னாள் செயலாளர் தனது மகனுடன் தற்கொலை

புது தில்லியில் சிபிஐ விசாரணைப் பிடியில் இருந்த நிறுவன விவகாரங்கள் துறை முன்னாள் பொது செயலாளர் பி.கே. பன்சால், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :27 செப்டம்பர் 2016, 7:18 am


புது தில்லி: புது தில்லியில் சிபிஐ விசாரணைப் பிடியில் இருந்த நிறுவன விவகாரங்கள் துறை முன்னாள் பொது செயலாளர் பி.கே. பன்சால், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்து, சிபிஐ விசாரணையின் பிடியில் இருந்த பன்சால், தனது மகனுடன் கிழக்கு தில்லியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து பன்சால் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தை அடுத்து, 2 மாதங்களுக்கு முன் பன்சாலின் மனைவியும் மகளும், இதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று பன்சாலும், அவரது மகனும் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 16ம் தேதி லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக கைது செய்யப்பட்ட பன்சால், பிறகு பிணையில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.