ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பதான்கோட் எதிரொலி: எல்லையில் நவீன வேலி அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூர எல்லைப் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2016, 5:40 am


புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூர எல்லைப் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரவையால் அமைக்கப்பட்ட உள்துறை முன்னாள் செயலாளர் மதுகர் குப்தா தலைமையிலான குழுவினர், பதான்கோட் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலியை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை செய்தது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் (1,225 கி.மீ.), ராஜஸ்தான் (1,037), பஞ்சாப் (553 கி.மீ.), குஜராத் (508 கி.மீ.)  ஆகிய 4 மாநிலங்கள் அமைந்துள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள் - செயற்கைக் கோள் கண்காணிப்பு - கூடிய வேலியை அமைத்து, அவற்றை நான்கு மாநில காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.