மத்திய பட்ஜெட் 2017-18: எதெல்லாம் விலை கூடுது? எதெல்லாம் விலை குறையுது?

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை  நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் 2017-18: எதெல்லாம் விலை கூடுது? எதெல்லாம் விலை குறையுது?

புதுதில்லி: மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் 2017-18ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை  நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்தார்.

அதில் அவர் மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வரிகளில் பெரிய அளவில் மாற்றங்களை செய்யவில்லை என்றும், இதனால் அரசுக்குப்

பெரிய வருவாய் இழப்போ அல்லது லாபமோ கிடையாது என்று தெரிவித்திருந்தார். 

இருந்தாலும் அவரது அறிவிப்பின் காரணமாக சில பொருட்களின் விலை உயரவும்,சில பொருட்களின் விலை குறையவும் உள்ளது. அது பற்றிய சிறிய கண்ணோட்டம்:

விலை குறையவுள்ள பொருட்கள்:

எல்.இ.டி விளக்குகள், சோலார் பேனல்கள், அலைபேசிகளுக்கான சர்க்யூட் போர்டுகள், மைக்ரோ ஏ.டி.எம்கள், விரல்ரேகை எடுக்கும் சாதனங்கள், விழித்திரை பதிவு செய்யும் ஸ்கானர்கள்

விலை கூடவுள்ள பொருட்கள்:

வெள்ளி நாணயங்கள், சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள், பீடிக்கள், பான் மசாலா, வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பப்படும் பொருட்கள், வாட்டர் பில்ட்டர்களில் பயன்படுத்தபப்டும் 'மெம்பரேன் எனப்படும் வடி சவ்வு, முந்திரிப்பருப்பு

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் ஜேட்லி, விரைவில் சரக்கு மற்றும் சேவை வரி திட்டமானது அமல் படுத்தபட உள்ளதால் தற்போது நடைமுறையில் உள்ள கலால் மற்றும் சேவை வரிகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com