தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆந்திராவில் சொகுசு பேருந்து கால்வாயில் விழுந்து கோர விபத்து: பலி 11 ஆனது

புவனேஸ்வரில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து கிருஷ்ணா மாவட்டம் மூலப்படு என்ற இடத்தில் சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :28 பிப்ரவரி 2017, 7:04 am


விஜயவாடா: புவனேஸ்வரில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து கிருஷ்ணா மாவட்டம் மூலப்படு என்ற இடத்தில் சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இன்று காலை 5.30 மணியளவில் பேருந்து கால்வாயின் மீது கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் விழுந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கிராம மக்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பேருந்தில் இருந்தவர்களையும் மீட்டனர். சுமார் 22 அடி ஆழமுள்ள கால்வாயில் பேருந்து தலைக்குப்புற விழுந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

Story image

பேருந்தில் இருந்த 40 பயணிகளை காவல்துறையினரும், பொதுமக்களும் சேர்ந்து மீட்டனர். அவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் நண்டிகாமா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியாகினர்.  ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். காயமடைந்தவர்களில் 10 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் தூங்கிவிட்டதாலும், விபத்து நேரிட்ட போது பேருந்து அதி வேகத்தில் இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Story image

விபத்து குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விபத்தில் பலியானவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.