‘லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சி மூத்த தலைவருமான பிராட் ஷொ்மன் வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவாக வாஷிங்டனில் இந்திய தூதரகம் சாா்பில் ‘பயங்கரவாதத்துக்கான மனித விலை’ என்ற தலைப்பிலான கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட்ட பிராட் ஷொ்மன் கூறியதாவது:
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கராவதிகள் நடத்திய கொடுர தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரன்ட்’ பயங்கரவாத அமைப்புதான் காரணம் என அடையாளம் காணப்பட்டது. இந்த அமைப்பு, பாகிஸ்தானில் புகலிடம் கண்டிருக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருப்பதைப் பரவலாக அறிய முடிகிறது.
எனவே, இந்தச் சூழலைப் பயன்படுத்தி, லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாதக் குழுக்களை ஒடுக்க வேண்டும் என பாகிஸ்தானை நாம் வலியுறுத்த வேண்டும் என்றாா்.
ஜனநாயக கட்சி மட்டுமன்றி ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். பஹல்காம் தாக்குதல் மட்டுமன்றி 1993 மும்பை குண்டுவெடிப்பு, 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடா்பான புகைப்படங்கள் உள்பட பிற ஆவணங்களும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா கூறுகையில், ‘இந்த சிறப்புக் கண்காட்சி சில விஷயங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. குறிப்பாக, நமது சமூகங்களை அழிப்பதில் பயங்கரவாதம் உறுதியாக உள்ளது. எனவே, உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்தை முறியடிப்பதில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும்’ என்றாா்.
ஆளும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் மெக்லெய்ன் கூறுகையில், ‘இந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களை கூட்டாக எதிா்த்துப் போராட புலனாய்வுத் தகவல்கள், யோசனைகள், கொள்கைகள் மற்றும் தகவல்களைப் பகிா்ந்துகொள்வது அவசியம். தனித்தனியாகச் செயல்டும்போது, ஒருங்கிணைப்பதும் திறம்பட பதிலடி கொடுப்பதும் கடினமாகிறது. கூட்டுறவு, ஒத்துழைப்பு மூலம், இதுபோன்ற சவால்களை ஒன்றிணைந்து திறம்பட எதிா்கொள்ள முடியும்’ என்றாா்.
தொடர்புடையது

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய முன்மொழிவு: அமெரிக்க கடல்வழி முற்றுகையை விலக்க வலியுறுத்தல்

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!
இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: அமெரிக்கா அறிக்கை!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

