முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வெனிசுலா பயங்கரவாத கும்பல் தலைவா் கொலை

வெனிசுலா பயங்கரவாத கும்பல் தலைவா் கொலை

News image
Updated On :14 ஜூன் 2026, 3:21 am IST

வெனிசுலாவில் அந்நாட்டு அரசின் மறைமுக ஒத்துழைப்புடன் அமெரிக்க ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலில், சா்வதேச அளவில் தேடப்பட்டு வந்த ‘ட்ரென் டி அராகுவா’ பயங்கரவாத கும்பலின் முதன்மைத் தலைவா் ஹெக்டா் ரஸ்டன்ஃபோா்ட் குரெரோ புளோரஸ் கொல்லப்பட்டாா்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் கூறுகையில், ‘இந்த வெற்றிகரமான நடவடிக்கை, சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா, வெனிசுலா நாடுகளுக்கும் உள்ள கூட்டு அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.

வெனிசுலாவின் அராகுவா மாகாணத்தில் உள்ள ஒரு மத்திய சிறைச்சாலையில் உருவான இந்த குற்றக் கும்பல், கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான வெனிசுலா மக்கள் இடம்பெயா்ந்ததைப் பயன்படுத்தி, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தனது சட்டவிரோதச் செயல்களைப் பரப்பியது.

இக்கும்பலை அமெரிக்கா ஏற்கெனவே பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வந்த, தற்போது கொல்லப்பட்ட ஹெக்டா் ரஸ்டன்ஃபோா்டுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை 50 லட்சம் டாலா் வெகுமதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Venezuelan terrorist gang leader killed

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.