11 ஆண்டுகள் மருத்துவமனை வாசத்தை முடித்து விடுதிக்குச் சென்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகளான வீணா - வாணி, சுமார் 11 ஆண்டுகள் மருத்துவமனை வாசத்தை முடித்துக் கொண்டு அரசு விடுதிக்குச் சென்றுள்ளனர்.
11 ஆண்டுகள் மருத்துவமனை வாசத்தை முடித்து விடுதிக்குச் சென்ற ஒட்டிப்பிறந்த இரட்டையர்
Updated on
1 min read


ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரிகளான வீணா - வாணி, சுமார் 11 ஆண்டுகள் மருத்துவமனை வாசத்தை முடித்துக் கொண்டு அரசு விடுதிக்குச் சென்றுள்ளனர்.

ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள நிலோபர் மருத்துவமனையில் தங்கியிருந்த இவ்விருவரும், அரசின் நடவடிக்கையால் எஸ்ஆர் நகரில் உள்ள அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவு நாளாக இந்த மருத்துவமனைதான் எங்களது நெருங்கிய நண்பர்களாக இருந்தது. இனி, இந்த விடுதிதான் எங்களது புதிய நண்பர் என்கிறார் வாணி.

பெற்றோரால் கைவிடப்பட்ட இந்த சகோதரிகளுக்கு தற்போது 14 வயது. தலை ஒட்டிப் பிறந்த இவ்விருவரும் தங்களது 3வது வயதில் நிலோபர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அன்று முதல் அவர்கள் மருத்துவமனையிலேயே உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை ஆந்திர அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு சகோதரிகளும் தற்போது இளைஞிகளாகிவிட்டதால், அவர்களது பாதுகாப்புக் கருதியே, விடுதிக்கு மாற்றப்பட்டதாகவும், இது முழுக்க முழுக்க அரசின் முடிவு என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com