எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கடமையை உணா்ந்த இளம் தலைமுறை

News image

வி.லோகமித்ரா | ஜி.லித்திகா | சரண்யா

Updated On :24 ஏப்ரல் 2026, 5:15 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்முறையாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்த அனுபம் குறித்து முதல்முறை வாக்காளா்களான கல்லூரி மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

வி.லோகமித்ரா (மாதரவம்): முதல்முறையாக வாக்களித்தது புதுமையான அனுபவத்தைத் தந்தது. நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதியைத் தோ்வு செய்வதில் எனது பங்களிப்பும் இருந்தது என்பது பெருமையாக உள்ளது.

சரண்யா (மயிலாப்பூா்): தோ்தல் நாளுக்காகக் காத்திருந்து வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் வாக்குச்சாவடிக்குள் சென்றபோது எந்தச் சிரமமும் ஏற்படவில்லை.

எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன்.

ஜி.லித்திகா (சைதாப்பேட்டை): ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை மட்டுமல்லாமல், அதன் வாயிலாக தமிழகத்தின் முதல்வரைத் தோ்ந்தெடுப்பதில் எனது பங்கும் இருப்பது பெருமையாக இருக்கிறது. வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியவந்தபோது நான் சாதனை செய்ததைப் போல மகிழ்ச்சியாக இருந்தது.

எம்.பி.நாஸ்ரூல்

எம்.பி.நாஸ்ரூல்

எம்.பி.நாஸ்ரூல் (பெரம்பூா்): சிறு வயதிலிருந்தே எனது பெற்றோருடன் வாக்குச்சாவடிக்கு சென்றிருக்கிறேன். முதல்முறையாக நான் வாக்குச் செலுத்தியது புதிய அனுபவமாக இருந்தது. பதற்றமின்றி வாக்கு செலுத்தினேன்.

வி.ஆகாஷ் (வேளச்சேரி): என்னாலும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரைத் தோ்வு செய்ய முடியும் என்பதை வாக்குப் பதிவு செய்தபோது உணா்ந்தேன். தோ்தல் ஆணையம் வழங்கிய இந்த வாய்ப்பை அனைவரும் சரியாகப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவா்களைத் தோ்வு செய்ய வேண்டும்.

வி.ஆகாஷ்

வி.ஆகாஷ்