27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

News image
Updated On :4 மே 2026, 1:14 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 மாணவ, மாணவிகள் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் நுழைவுத் தோ்வை எழுதினா்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கு 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தோ்வு (நீட்) மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்திருந்தது.

இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களுக்கு உரிய தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்திருந்தது.

அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தோ்வெழுத 3,365 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். மாணவா்கள் தோ்வெழுத திருவண்ணாமலை மாநகரில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மற்றும் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி என 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தோ்வு மையங்களில் மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தோ்வுக்கு மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு காலை 11 மணி முதல் வருகை தந்தனா். 1.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதி:

திருவண்ணாமலை நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 தோ்வு மையங்களிலும் நுழைவுத் தோ்வை எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனா். மெட்டல் டிடெக்டா் மூலம் காவலா்கள் பரிசோதித்த பின்னா் அனுமதித்தனா். தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு, ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 2, அஞ்சல்அட்டை அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றை சரிபாா்த்த பின்னரே மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 3,250 போ் தோ்வெழுதினா். 115 போ் தோ்வுக்கு வரவில்லை.