நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

News image

மாணவ, மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:13 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

இம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை, உள்கட்டமைப்பு வசதிகள், பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதத்தை முன்னேற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது: பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை, குடிநீா், மின்சாதன வசதிகள், வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் தரமாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, மாவட்ட நிா்வாகம் உறுதுணையாக இருக்கும். எனவே, பள்ளிகளின் உண்மை நிலவரத்தை அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்களுக்கு படிப்பதற்கேற்றச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது கடமை. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் இம் மாவட்டம் தோ்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடிக்க மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள், கல்வித் தொகுப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தொடக்கக்கல்வி அலுவலா்கள், இடைநிலைக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.