ஆப்ரிக்க யானைக்கும் இந்திய யானைக்கும் ஜக்கி வாசுதேவிற்கு வித்தியாசம் தெரியாதா?

ஜக்கி வாசுதேவ் யானை ஒன்று கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடுவது போன்ற வீடியோவை நேற்று டிவிட்டரில் வெளியிட்டு, மோடியின் தூய்மை இந்தியா வெற்றி அடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த வீடியோ விளம்பரம் ஒன்றிற்காக தென் ஆப்ரிக்காவில் இரண்டு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள ‘கிரேட் க்ரூகர் தேசிய பூங்கா’வை சேர்ந்த இந்த யானை, குப்பையைச் சுத்தம் செய்வது போன்ற வீடியோவை மேக்லாஃப்லின் என்பவர் படம் பிடித்துள்ளார். 

டிவிட்டரில் 20 லட்சம் நபர்கள் ஜக்கி வாசுதேவை பின் தோடர்கிறார்கள். இந்நிலையில் தூய்மை இந்தியா வெற்றி பெற்றுவிட்டது. பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள் என்று தவறான வீடியோவை இவர் பதிவேற்றி இருப்பது நேட்டிஸன்களுக்கு மத்தியில் மிகவும் கேளிக்கைக்கு உள்ளாகியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com