விசாரணை அதிகாரிகளை அனுமதியின்றி மாற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகளை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளை, முன் அனுமதியின்றி மாற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகளை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகளை, முன் அனுமதியின்றி மாற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகளையும், நீதிமன்ற முன் அனுமதியின்றி மாற்றக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை கடந்த 2012- ஆம் ஆண்டில் இருந்து மேற்பார்வையிட்டு வந்த டிஐஜி ரவிகாந்த் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்குர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: நிலக்கரிச் சுரங்க முறைகேடுகளை விசாரித்து வரும் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு அரசு சிறப்பு வழக்குரைஞர் ஆர்.எஸ்.சீமா ஒப்புதல் அளித்திருக்கிறார். இருந்தபோதிலும் அவர்களை பணியிடமாற்றம் செய்வதற்கு முன் உச்ச நீதின்றத்திடம் மத்திய அரசு அனுமதி பெற வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அமரேந்திர சரண், 'விசாரணை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது' என்று கூறினார். அதற்கு, விசாரணை அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகத்தால் பணியிட மாற்றம் செய்ய முடியாது என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை நீதிபதிகள் சுட்டிக் காட்டினார். நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற்ற பிறகே, விசாரணை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்கு மேலும் 4 அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...