கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜூலை 20) எண்ணப்படவுள்ளன. இதன் முடிவுகள் மாலை 5 மணிக்கு முன்னதாக

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:28 pm

DIN

குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜூலை 20) எண்ணப்படவுள்ளன. இதன் முடிவுகள் மாலை 5 மணிக்கு முன்னதாக வெளிவந்துவிடும். இதனால், நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அடுத்து பதவியேற்க போவது யார் என்பது குறித்தும் அப்போது தெரிந்துவிடும்.
இதுகுறித்து மக்களவைச் செயலரும், தேர்தல் அதிகாரியுமான அனுப் மிஸ்ரா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வியாழக்கிழமை காலையில் 11 மணிக்கு தொடங்கும். முதலாவதாக, நாடாளுமன்ற இல்லத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதிலிருக்கும் வாக்குகள் எண்ணப்படும். அதன்பிறகு, பல்வேறு மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் வாக்குகள் எண்ணப்படும்.
வாக்குகள் 4 தனித்தனி மேஜைகளில் வைத்து எண்ணப்படும். சுமார் 8 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
மாலை 5 மணிக்கு முன்பு முடிவு தெரிந்துவிடும்: முந்தைய 2 குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தியுள்ள தேர்தல் ஆணைய அதிகாரி கூறும்போது, தேர்தல் முடிவுகள் பொதுவாக 5 மணிக்குள் வெளிவந்துவிடும் என்றார்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலுக்காக, நாடாளுமன்ற இல்லத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர்த்து, பல்வேறு மாநிலங்களில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்தலில், 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.