அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விழாக்கோலம் பூண்ட ராம்நாத் கோவிந்த் இல்லம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லம் வியாழக்கிழமை விழாக்கோலம் பூண்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:28 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லம் வியாழக்கிழமை விழாக்கோலம் பூண்டது.
கான்பூர் மாவட்டத்தின் கல்யாண்பூரில் உள்ள மகரிஷி தயானந்த் விஹார் காலனியில் உள்ள ராம்நாத் கோவிந்தின் இல்லத்துக்கு காலை 7 மணி முதலே உறவினர்களும், அண்டை வீட்டாரும் குவியத் தொடங்கினர். தேர்தல் முடிவு மாலையில் அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியடைந்த அவர்கள், இனிப்புகள் வழங்கியும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும் வெற்றியைக் கொண்டாடினர். குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் ஒரு சேர அளிக்கிறது என்று உள்ளூர் மாநராட்சி மேயர் ஒருவர் கூறினார். ''இது, எங்களுக்கு தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைத் திருநாள்'' என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன்னரே வெற்றியைக் கொண்டாடத் தொடங்கிவிட்டதாக மற்றொரு மாநகராட்சி மேயர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.