தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஜம்மு-காஷ்மீர் வங்கியில் ரூ.5 லட்சம் கொள்ளையடித்த தீவிரவாதிகள்

அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி எனுமிடத்தில் அம்மாநில வங்கிக் கிளையில் புகுந்த தீவிரவாதிகள் ரூ.5 லட்சத்துக்கும் மேலான பணத்தை திங்கள்கிழமை கொள்ளையடித்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி எனுமிடத்தில் அம்மாநில வங்கிக் கிளை செயல்படுகிறது.

இங்கு புகுந்த தீவிரவாதிகள் ரூ.5 லட்சத்துக்கும் மேலான பணத்தை திங்கள்கிழமை கொள்ளையடித்துச் சென்றனர்.

அதுபோல ஜூலை 11-ந் தேதி இமாம் சாஹிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கிக் கிளையில் கொள்ளை முயற்சி மற்றும் ஆயுத கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை சோஃபியன் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், கடந்த ஜூன் 7-ந் தேதி இதேபோன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வான்பூரா என்ற மாவட்டத்தில் உள்ள புல்வாமா என்ற இடத்தில் அமைந்துள்ள வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அங்கிருந்த பாதுகாவலர்களால் அந்தக் கொள்ளைச் சம்பவம் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது.

சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் உள்ளிட்டோரால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக அங்குள்ள காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.