ஜி.எஸ்.எல்.வி மாக்-3 ராக்கெட் கவுன்ட்டவுன் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி மாக்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் தொடங்கியது.


ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.பி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இது இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே அதிக எடை கொண்டது. அதாவது 640 டன் எடைக்கொண்டது. 4 டன் வரை எடையுள்ள செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் சென்று 36 ஆயிரம் கிலோமீட்டர் புவிவட்டப் பாதையில் செலுத்தும் வல்லமை கொண்டது. இந்த ராக்கெட் நாளை (ஜூன் 5) மாலை 5.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த ராக்கெட் மூலம் 3 ஆயிரத்து 136 கிலோ எடைக்கொண்ட ஜி.சாட்-19 என்ற அதி நவீன தகவல் தொடர்பு செயற்கைகோள் விண்ணுக்கு அனுப்பப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று மாலை 3.58 மணிக்கு தொடங்கியது.
கவுண்ட்டவுன் முடிந்து நாளை திங்கள்கிழமை மாலை 5.28 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய மைல் கல்லாக கருதப்படும், இந்த ராக்கெட் மூலம் எதிர்காலத்தில் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப முடியும். இந்த கனரக ராக்கெட் மூலம் பெண் ஒருவரை முதலில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...