புதுதில்லி: இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம் நாடுகளுக்கான புதிய இந்திய தூதர்களை மத்திய அரசு இன்று நியமித்துள்ளது.
இத்தாலி நாட்டிற்கான இந்திய தூதராக 1989 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பிரிவு அதிகாரியான ரீனட் சாந்து, டென்மாக் நாட்டிற்கான இந்திய தூதராக 1991-ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பிரிவு அதிகாரியான அஜித் வி குப்தே, பெல்ஜியம் நாட்டிற்கான இந்திய தூதராக 1986-ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் பிரிவு அதிகாரியான கைட்ரி இசார் குமார் ஆகியோரை இன்று நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் ஒரிரு நாட்களில் தங்களது பணிகளை தொடங்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.