லண்டன்: எனக்கு எதிராக இந்திய ஊடகங்கள் வரயறையற்ற தீவிர விஷம பிரச்சாரத்தை செய்து வருகின்றன என விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். பிரிட்டனுக்குத் தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்று இந்தியா ஏற்கெனவே அறிவித்தது. பிரிட்டனிடம் விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கோரிக்கை வைத்தது.
அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்று பிரிட்டன் அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் சரணடைந்த மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஆறரை லட்சம் பவுண்டுகள் (சுமார் ரூ.5 கோடியே 30 லட்சம்) பிணைத் தொகை செலுத்தி 3 மணி நேரத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அப்போது, பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களை நீதிமன்றத்திடம் அளித்துவிட வேண்டுமென்று மல்லையாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் மல்லையா நேரில் ஆஜரானார். அவர் சார்பில் மீண்டும் ஜாமீன் கோரப்பட்டது. இதையடுத்து, அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா கூறுகையில், என் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கிறேன். நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்ப வேண்டுமென்று நினைக்கவில்லை. நீதிமன்றத்தில் எனது தரப்பு நியாயத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. நான் எதைக் கூறினாலும், அதனை திரித்து வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. எனவேதான், ஊடகங்களிடம் நான் எதையும் கூறுவது இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா, தனக்கு எதிராக இந்திய ஊடகங்கள் தீவிர விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்ற என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு லண்டன் நீசிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. எனவே, தீர்ப்புக்காக காத்திருங்கள் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
விஜய் சேதுபதியின் காட்டான் டீசர்!

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!

பிரதமர் மோடி மார்ச் 1-ல் தமிழகம், புதுச்சேரி வருகை! திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம்!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

